மிட்டாய் கவிதைகள்!

என்மனம் என்னிடமில்லை

July 23, 2013

enmanam ennidamillai

சப்பாத்திக் கள்ளி சாலையின் ஓரம்
சோலை போலே சேலை உடுத்தி,
கொடியிடை தாங்கிய குடத்துத் தண்ணீர்
கண்டதும் தாகம் தொற்றிக் கொள்ளும்!
மின்னலாய் மூக்குத்தி இடியாகும் வளையோசை
மண்ணிலே விழுமே வியர்வை மழைத்துளி!
வெட்கமும் வந்ததே வெயிலும் இருந்ததே
வெளுத்த முந்தானை முகத்திரை ஆனதே!
பேருந்து சன்னலூடே எட்டிப் பார்த்தும்
போர்த்திய அவள்முகம் எட்ட வில்லை!
எப்போது காண்பேன் ஏங்கிப் போனேன்
இப்போது என்மனம் என்னிட மில்லை!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்